இந்த நக்ஷத்திரக் கூட்டம் குதிரை முக வடிவில் அமையும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய். Read More : https://dheivegam.com/aswini-general-character/
விஷ்ணுவின் திருநாமத்தைப் போல அமைந்த 3 நக்ஷத்திரக் கூட்டம் இது. இதுவும் மேஷ ராசியில் அமைகிறது. ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்ற பழமொழி உண்டு. உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும், சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள் இவர்கள். Read More : https://dheivegam.com/barani-natchathira-general-characters/
கத்தி போல் அமைந்துள்ள 6 நக்ஷத்திரக் கூட்டங்கள் இவை. முருகப் பெருமானுக்கு உகந்த நக்ஷத்திரம் இது. இதன் முதல் பாதம் மேஷராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் அமையும். Read More : https://dheivegam.com/kiruthigai-natchathiram-general-characteristics/
தேர் வடிவில் அமைந்த 5 நக்ஷத்திரங் களின் கூட்டம் இது. ரிஷப ராசியில் சேரும் நக்ஷத்திரம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நக்ஷத்திரத்தில்தான் அவதரித்தார். இது ஒரு சிரேஷ்டமான நக்ஷத்திரம். இதன் ராசிநாதன் சுக்ரன், நக்ஷத்திர அதிபதி சந்திரன். Read More : https://dheivegam.com/rohini-natchathiram-general-characteristics/
ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். மானின் தலைபோலத் தோற்றமளிப்பதால் மிருகசீர்ஷம் எனப் பெயர் பெற்றது. Read More : https://dheivegam.com/mirugasirisham-natchathiram-general-characteristics/
இது மிதுன ராசியில் அடங்கும். இது ஒரே ஒரு நட்சத்திரம் தான். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக் கருதலாம். ‘சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்’ இது என்பார்கள். Read More : https://dheivegam.com/thiruvathirai-natchathiram-general-characteristics/
இது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம். ஒரு பல்லக்கு வடிவில் தோற்றமளிப்பது, மக நட்சத்திரக் கூட்டம். ‘மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்தப் பழமொழிகளை மட்டுமே நம்பி நட்சத்திரப் பலன்களைக் கூறக்கூடாது. Read More : https://dheivegam.com/magam-natchathiram-general-characteristics/
இரண்டு கண்களின் கருமணிகள்போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும் சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும். Read More : https://dheivegam.com/puram-natchathiram-general-characteristics/
இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும். Read More : https://dheivegam.com/uthiram-natchathiram-general-characteristics/
அஸ்தம் என்றால் ‘உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன், புதன். Read More : https://dheivegam.com/astham-natchathiram-general-characteristics/
தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும் இது, ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு. Read More : https://dheivegam.com/swathi-natchathiram-general-characteristics/
தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும் இது, ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு. Read More : https://dheivegam.com/swathi-natchathiram-general-characteristics/
இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும். Read More : https://dheivegam.com/visakam-natchathiram-general-characteristics/
வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். Read More : https://dheivegam.com/anusham-natchathiram-general-characteristics/
‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை ‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர். Read More : https://dheivegam.com/ketai-natchathiram-general-characteristics/
அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர். Read : https://dheivegam.com/mulam-natchathiram-general-characteristics/
பூராடம்:தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். ‘பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை ‘அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். Read More : https://dheivegam.com/pooradam-natchathiram-general-characteristics/
உத்திராடம்:நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். Read More : https://dheivegam.com/uthiradam-natchathiram-general-characteristics/
ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. Read More : https://dheivegam.com/thiruvonam-natchathiram-general-characteristics/