Skip to main content

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 9 – அக்டோபர் 15 வரை

மேஷம்:
மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் உங்களை உற்சாகமடையச் செய்யும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
மாணவ மாணவியர் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராதச் சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 15
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7
முக்கியக் குறிப்பு: 11, 12, 13, 14 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

Comments

Popular posts from this blog

குங்குமத்தை கைதவறி கொட்டினால் அபசகுனமா ?

இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள்.

Read More : https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/

நெஞ்சு சளி நீக்க உதவும் பாட்டி வைத்தியம் - சித்த மருத்துவ குறிப்பு 1

மழை காலம் அல்லது குளிர்காலம் என்றாலே பலரும் அவதிப்படுவது சளி தொல்லையால் தான். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.

Read More : https://dheivegam.com/nenju-saliyai-neeka-udhavum-kai-vaithiyam/